Saturday, November 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் குறைந்த தங்கம் விலை

மீண்டும் குறைந்த தங்கம் விலை

சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4,100 டொலராக தாண்டியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இன்றைய தினம் 3,900 டொலராக மீண்டும் சரிவடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, நேற்றைய தினம் (12) 334,000 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று (13) 331,200 ரூபாவாகச் சரிவடைந்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 363,000 ரூபாவாக நிலவிய 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை, இன்று 360,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments