கியூபெக் சுகாதாரத் துறை நிறுவனமான ‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) அமைப்பைக் கலைப்பதாகத் தேர்தல் காலத்தில் வாக்களித்த ஆளும் ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) அரசாங்கம், தற்போது அதனை முற்றிலுமாக அகற்றுவதற்குப் பதிலாக ‘மாற்றிமைக்கப்‘ போவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘பார்ட்டி கியூபெக்வா‘ (PQ) அரசாங்கம் தெளிவற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
கடந்த வாரம் ‘சாந்தே கியூபெக்’ குழுவினரைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்த, சுகாதார, தடுப்பு மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் மாரி-கார்லின்லப்லாம், அந்த அமைப்பு அனைத்துச் செயல்களையும் தவறாகச் செய்துவிடவில்லை என்பதைத் தாம் ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சுகாதாரச் சேவைகள் மேலும் பரவலாக்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மிகக் கனமானது மற்றும் செலவுமிக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கியூபெக் அரசாங்கத்தின் இந்த முரண்பாடான கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.


