Saturday, November 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நுவரெலியாவில் பெண் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

நுவரெலியாவில் பெண் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய நபரொருவர், நேற்று (12) மாலை நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்காஸ் தோட்ட பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில், கடந்த நவம்பர் 10 ஆம் திகதி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை குறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கமைய விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் போது, கடந்த நவம்பர் 10 ஆம் திகதி திரப்பனை பொலிஸ் பிரிவில் பொலிஸாரின் காவலிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலும் குறித்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments