Tuesday, November 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வீதிப் பந்தயம்: முகமூடி நபர் கைது

கனடாவில் வீதிப் பந்தயம்: முகமூடி நபர் கைது

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் சட்டவிரோத வீதிப் பந்தயங்களில் ஈடுபட்டதாக பிராம்ப்டனைச் சேர்ந்த 24 வயதுடைய தர்மன் தூர் என்ற நபர் மீது பீல் பிராந்தியக் காவல்துறையினர் ஒன்பது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் மிசிசாகாவின் எக்ஸ்ப்ளோரர் டிரைவ் மற்றும் சேட்டிலைட் டிரைவ் பகுதியில் சிவப்பு நிற பிஎம்டபிள்யூ மகிழுந்து சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். தொடர்ந்து செப்டம்பர் 26 அன்று, அதே வாகனம் மிசிசாகாவின் மெடோபைன் பவுல்வர்ட் பகுதியிலும் பின்னர் டொராண்டோவின் கிளேசன் ரோடு பகுதியிலும் மீண்டும் பந்தயத்தில் ஈடுபட்டதோடு, சிவப்பு விளக்கு சமிக்ஞையை மீறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் பதிவு எண் பலகைகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், ஓட்டுநர் பனிச்சறுக்கு முகமூடி அணிந்து தனது அடையாளத்தை மறைத்திருந்தார். மூன்று மாத தீவிர விசாரணைக்குப் பின்னர் அடையாளம் காணப்பட்ட தர்மன் தூர், அக்டோபர் 28 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பீல் பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை 214 சாகச ஓட்டுநர் குற்றச்சாட்டுகளும் 119 கைதுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments