Tuesday, November 10, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா!

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது கனடா!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவுக்கு எதிராகப் புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவித்துள்ளது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் Anita Anand, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் தொடர்புடைய 38 நிறுவனங்கள் மற்றும் 24 தனிநபர்கள் புதிய தடைகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ரஷ்யாவின் ஏவுகணைத் தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ உற்பத்தி மற்றும் இணையவழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகக் கூறப்படும் தரப்புகளைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவின் போருக்கான நிதி ஆதாரங்களாகச் செயல்படுவதாகக் கூறப்படும் சில Cryptocurrency பரிமாற்ற நிறுவனங்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.உக்ரைனுக்கு ஆதரவான சர்வதேச நடவடிக்கைகளில் கனடா தொடர்ந்து பங்கேற்கும் எனவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments