Monday, November 2, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறையில் பாரிய குறைபாடு

கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறையில் பாரிய குறைபாடு

கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறையில் சாரதிகளுக்கான பயிற்சி, வாகனப் பராமரிப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறை பல மாற்றங்களைச் சந்தித்துள்ள நிலையில், சில நிறுவனங்கள் போதிய பயிற்சியின்றி சாரதிகளைப் பணியில் அமர்த்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அண்மைய அரசாங்கத் தணிக்கைகள், வீதிப் பரிசோதனைகள் மற்றும் பொலிஸ் விசாரணைகளில் லொறிகளின் பராமரிப்பு மற்றும் சாரதி உரிமம் வழங்கும் நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், சில நிறுவனங்கள் குறைந்த செலவில் விரைவான பயிற்சிகளை வழங்கி, பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும் கனடாவின் லொறிப் போக்குவரத்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

இதனால் சாரதிகளுக்கான முறையான பயிற்சி, வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளன.

கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறை தற்போது பாதுகாப்பு மற்றும் தரமான பயிற்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் நிறுவனங்கள் என்றும், செலவுகளைக் குறைப்பதற்காக விதிமுறைகளைப் புறக்கணிக்கும் நிறுவனங்கள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து வருவதாக கனடிய ட்ரக்கிங் கூட்டமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பனிப்பொழிவு மற்றும் கடுமையான காலநிலைகளில் போதிய அனுபவமற்ற சாரதிகளை வீதிகளில் அனுப்புவது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால் கனடாவில் லொறிப் போக்குவரத்துத் துறையின் பயிற்சி மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments