Monday, October 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அமெரிக்காவிடமிருந்து முதற்கட்ட எஃப்-35 போர் விமானங்களைப் பெற்றது கனடா

அமெரிக்காவிடமிருந்து முதற்கட்ட எஃப்-35 போர் விமானங்களைப் பெற்றது கனடா

அமெரிக்காவிடமிருந்து தனது முதற்கட்ட எஃப்-35 ரக போர் விமானங்களை கனடா பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக எத்தனை அமெரிக்க விமானங்களைக் கொள்முதல் செய்வது என்பது குறித்தான ஆலோசனையில் கனடிய அரசாங்கம் நிர்வாகம் இன்னும் ஈடுபட்டுள்ளது.

பொனிக்ஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில், கனடாவின் மேப்பிள் இலை இலச்சினையுடன் கூடிய எஃப்-35 போர் விமானத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பான இந்த இரண்டு போர் விமானங்களைப் பெற்றுக் கொண்டதாக ராயல் கனடிய விமானப்படை  சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

“உலகிலேயே மிகச்சிறந்த போர் விமானம்” என அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ராவால் சமீபத்தில் புகழப்பட்ட இந்த புதிய விமானங்கள் மூலம், விமானிகளுக்கான பயிற்சியை எப்போது தொடங்கவுள்ளது என்ற விவரங்களை கனடிய விமானப்படை உடனடியாக வெளியிடவில்லை.

இத்தகைய 88 ஸ்டீல்த் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த திட்டத்தை கனடிய பிரதமர் மார்க் கார்னி நிறுத்தி வைத்துள்ளார்.

அதற்குப் பதிலாக ஸ்வீடனின் சாப் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘க்ரிபன்’ போர் விமானங்களையும் உள்ளடக்கிய கலப்பு விமானப் படையை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான வர்த்தகப் போர் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பிரதமர் கார்னி இந்தக் கொள்முதல் மறுபரிசீலனையைத் தொடங்கினார்.

இந்த மறுபரிசீலனை மதிப்பீடு ஒரு வருடத்திற்கு முன்பே முடிந்திருக்க வேண்டும். அமெரிக்காவின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு, குறைந்த திறன்களைக் கொண்ட விமானங்களை மட்டுமே நேட்டோ உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு வழங்குவது குறித்து டிரம்ப் கடந்த ஆண்டு யோசனை தெரிவித்திருந்தார்.

மேலும், எஃப்-35 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள் வாஷிங்டனின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன என்று கனடாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லாயிட் ஆக்ச்வர்தி சனிக்கிழமை தனது வலைப்பதிவில் எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments