Sunday, October 25, 2026
spot_img
HomeUncategorizedகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கன்சர்வேட்டிவ் கட்சி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கன்சர்வேட்டிவ் கட்சி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தேர்தல் இரவு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சி (BC NDP) ஆட்சியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியாகச் செயற்படவுள்ளது

கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெற்ற மாகாணத் தேர்தலில், லோர்ன் டோர்க்சன் (Lorne Doerkson) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான இடங்களைப் பெற்றுள்ளதாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் 93 தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மை ஆட்சியை அமைப்பதற்கு 47 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், ஆரம்பகட்டத் தேர்தல் கணிப்புகளின்படி கன்சர்வேட்டிவ் கட்சி 60க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments