மதங்களுக்கிடையே அமைதியின்மை மற்றும் மோதல்களை உருவாக்க எத்தனிக்கும் பல தராதரங்களை சேர்ந்த சுமார் 20 பேர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன
இந்தச் சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் சமூக ஊடகப்பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதை சாதகமாக பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வதிவோர் பல்வேறு போலியான சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டு இன -மத கலவரங்களை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் சமூக ஊடக கணக்குகளில் சில வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையொன்றை ஆரம்பித்துள்ளது.
சிலர் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரிலேயெ இவ்வாறு செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும்இ இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் போது விசாரணை அதிகாரிகளுக்கு பல சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது தொடர்பில் போதிய தகவல்கள் கிடைக்காமைஇ கணக்குகள் வெளிநாடுகளில் இயங்குதல் மற்றும் நிலவும் சட்டக் வரம்புகள் என்பன அதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்


