Saturday, October 24, 2026
spot_img
Homeகனடா செய்திகள்குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மார்க் கார்னி!

குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மார்க் கார்னி!

கனடா, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் தலையிடத் திட்டமிட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, கனேடிய அரசியல்வாதிகள் அமெரிக்க அரசியலில் செல்வாக்குச் செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்கத் தூதரகம் குற்றஞ்சாட்டியிருந்தது. இக்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இஸ்தான்புல்லில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்து தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments