Friday, October 16, 2026
spot_img
Homeபொது செய்திகள்பிச்சை எடுக்கும் AI ரோபோ!

பிச்சை எடுக்கும் AI ரோபோ!

சீனாவில் வீதியில் பிச்சை எடுக்கும் AI ரோபோ! QR குறியீடு மூலம் பணம் வழங்கும் வசதி

சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித வடிவ ரோபோ ஒன்று, வீதியோரத்தில் நின்று பணம் கோரும் சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிச்சுவான் நகரில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் G1 என்ற மனித வடிவ ரோபோ, தனது மின்கலத்தை மீள்நிரப்புவதற்குப் பணம் தேவைப்படுவதாக ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து, வீதியில் செல்வோரிடம் உதவி கோருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரோபோவின் அருகில் பணம் செலுத்துவதற்காக ஒரு தட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக QR குறியீடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களைப் போன்ற செயல்களைச் செய்யும் ரோபோக்கள் உருவாகிவரும் நிலையில், அவற்றைப் பயன்படுத்திப் பணம் திரட்டும் இந்த வித்தியாசமான முயற்சி சமூக வலைத்தளங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

எனினும், குறித்த ரோபோவின் மூலம் தினமும் எவ்வளவு பணம் சேகரிக்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments