Friday, October 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்கள் OMP அலுவலகத்துக்கு அழைப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்கள் OMP அலுவலகத்துக்கு அழைப்பு!

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) அழைப்பின் பேரில் இன்று (16) காலை கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

கல்முனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்களின் துயரங்களும், அலுவலகத்தின் விசாரணைகளின் முன்னேற்றமும் குறித்து கலந்துரையாடப்பட்டது.

OMP ஆணையாளர் சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், அலுவலகத்திடம் ஆரம்பத்தில் சுமார் 25,000 காணாமல் ஆக்கப்பட்டோரின் பதிவுகள் இருந்ததாகவும், சரிபார்ப்புகளுக்குப் பின்னர் தற்போது 17,000 பேரின் தரவுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவர்களில் சுமார் 11,000 பேருக்கு முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், OMP-ஐப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி சிலர் குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரிப்பதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, பிறப்புச் சான்றிதழ் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளை மட்டுமே வழங்குமாறு அலுவலகம் எச்சரித்துள்ளது. மூல ஆவணங்களை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments