Monday, October 12, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு!

கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு!

தென்மேற்கு ஒன்ராறியோ பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பெர்கஸ் நகருக்கு வெளியே உள்ள பீட்டி லைன் மற்றும் வெல்லிங்டன் ரோடு 17 சந்திப்புக்கு அருகில் உள்ள விளைநிலத்திற்கு வெள்ளிக்கிழமை காலை அவசரக் குழுவினர் விரைந்தனர்.

போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வழங்கிய தகவலின்படி, அனுபவம் வாய்ந்த இரண்டு விமானிகளுடன் கூடிய ‘Skybolt’ ரக சிறிய விமானம், பெர்கஸ் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் வான்வழி சாகசப் பயிற்சிக்காகப் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமான நிலையத்திலிருந்து வடமேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்காச்சோளக் காட்டில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது.

 

 

விபத்தைத் தொடர்ந்து பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்ட போதிலும், விமானத்தில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பலியானவர்களின் வயது, பாலினம் மற்றும் ஊர் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தகவல் திரட்டும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments