Friday, October 9, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேஷியா காட்டுத் தீ

இந்தோனேஷியா காட்டுத் தீ

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீயால் , மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இந்தோனேஷியாவில் பதிவான மிகவும் மோசமான காட்டுத் தீ பருவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சட்டவிரோதமாக காடுகளை ‘வெட்டி எரிக்கும்’ (slash-and-burn) நடைமுறைகளே இந்தக் காட்டுத்தீக்கு முக்கியக் காரணமாகும்.

காட்டுத்தீ மற்றும் நிலப்பரப்புத் தீச்சம்பவங்கள் காரணமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 50,000 க்கும் அதிகமான சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் உருவாகியுள்ள “சுப்பர் எல் நினோ” (Super El Niño) காலநிலை மாற்றம் இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் வறட்சியை மேலும் மோசமாக்கியுள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நீடித்த புகைமூட்ட நெருக்கடி காரணமாக மலேசியாவில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல வெளிப்புறக் கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, சிங்கப்பூரில் காற்றின் தரம் “சுகாதாரமற்ற” (Unhealthy) நிலையை எட்டியுள்ளபோதிலும், புகழ்பெற்ற எஃப்1 கிராண்ட் ப்ரீ (F1 Grand Prix) கார் பந்தயம் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments