Thursday, October 8, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்திய மகளிர் அணியின் புதிய தலைவராக ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் அணியின் புதிய தலைவராக ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களுக்குமான புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு தசாப்த காலமாக தலைவராக செயல்பட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, மந்தனா புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மந்தனாவின் முதல் பணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடராகும். ஒக்டோபர் 16ஆம் திகதி ராய்ப்பூரில் தொடங்கும் இந்தத் தொடரில் 3 ரி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கு முன்பு மந்தனா இந்திய அணியை 4 ஒருநாள் மற்றும் 18 ரி20 போட்டிகளில் வழிநடத்தியதுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் தலைவராக வழிநடத்தி WPL பட்டத்தை வென்றுள்ளார்.

இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரரான மந்தனா, செப்டம்பர் மாதத்தில் அனைத்து வடிவங்களிலும் அதிக சர்வதேச ஓட்டங்கள் எடுத்த இந்திய மகளிர் வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜிடம் இருந்து கைப்பற்றினார்.

மேலும், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 18 சதங்களை பதிவு செய்துள்ளதுடன், டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 என மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments