இந்திய விமானி ஸ்மித் மச்சாரை மருத்துவமனைக்கு நேரில் சென்று துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நலம் விசாரித்தார்.
இதுகுறித்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் மனித உயிர்கள் மீதான அக்கறை ஆகியவற்றின் உச்சகட்ட வடிவமாகத் திகழ்ந்த ஃப்ளைதுபை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு எங்கள் சார்பாகவும், நாட்டின் சார்பாகவும் முழுமையான பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.
படுகாயங்களுடன் எதிா்த்துப் போராடிய மச்சாா், சக பயணிகள்-ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்தாா். பதற்றமான சூழலிலும், விமானி அறையின் கதவைத் திறந்து, பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த ஸ்மித் மச்சாரின் தீரத்துக்கு தலைவா்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனா்.
இதனிடையே, சௌதி அரேபியாவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும் கைது செய்யப்பட்ட துணை விமானி, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். இச்சம்பவம் தொடா்பாக யுஏஇ மட்டுமின்றி இஸ்ரேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.


