இந்தியப் பாதுகாப்புப் படையினரின் (BSF) துப்பாக்கிப் பிரயோகத்தால் இரண்டு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானுக்கான இந்திய உயர்ஸ்தானிகரை அழைத்து கண்டனம் தெரிவிக்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியான பேடியன் (Bedian) பகுதியில், இருவர் மீது எந்த வித காரணமுமின்றி இந்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சோ அல்லது இந்திய பாதுகாப்புப் படையோ எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


