Thursday, October 1, 2026
spot_img
Homeஉலக செய்திகள்AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

AIக்கு SI என பெயர்மாற்ற ட்ரம்ப் உத்தரவு

செயற்கை நுண்ணறிவு (AI) என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை இனி ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ (Super Intelligence – SI) என குறிப்பிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான நிறைவேற்று உத்தரவில் ட்ரம்ப் 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்துக்குட்பட்ட துறைகள் மற்றும் முகமைகள் உத்தியோகபூர்வ கடிதங்கள், பொது அறிவிப்புகள், இணையத்தளங்கள், அறிக்கைகள் மற்றும் கொள்கை ஆவணங்களில் ‘Artificial Intelligence’ மற்றும் ‘AI’ என்பதற்குப் பதிலாக ‘Super Intelligence’ மற்றும் ‘SI’ ஆகிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு என்ற பெயர், தற்போதைய முன்னணி தொழில்நுட்பங்களின் வளர்ந்து வரும் திறன்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும், அவை மனித நுண்ணறிவை வெறுமனே பின்பற்றுவதைக் கடந்து பல்வேறு துறைகளில் புதிய திறன்களை உருவாக்கி வருவதாகவும் அமெரிக்க நிர்வாகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக புதிய சட்ட வரையறையை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் தலைமையில் 60 நாட்களுக்குள் ‘Super Intelligence’ மற்றும் ‘SI’ என்பதற்கான கூட்டாட்சி வரையறையை முன்மொழியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிமுறைகள், ஒப்பந்தங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ட்ரம்ப் சந்திப்பு நடத்தியிருந்தார். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து AI தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாக மேம்படுத்துவது தொடர்பான தன்னார்வ ஒப்பந்தமும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ‘Super Intelligence’ என்பது AI துறையில் ஏற்கனவே தனித்துவமான தொழில்நுட்பக் கருத்தாகப் பயன்படுத்தப்படும் சொல் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக, மனிதர்களின் அறிவாற்றலை பெரும்பாலான அல்லது அனைத்து அறிவாற்றல் துறைகளிலும் மிஞ்சக்கூடிய எதிர்கால தொழில்நுட்ப அமைப்புகளை குறிக்க ‘superintelligence’ பயன்படுத்தப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments