Sunday, September 27, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - ஜப்பானுக்கு மற்றுமொரு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ஜப்பானுக்கு மற்றுமொரு தங்கம்

ஐச்சி-நகோயாவில் நேற்று நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான ‘ஃபாயில்’ (Foil) வாள்வீச்சு அணிகள் பிரிவில் தென் கொரியாவை வீழ்த்தி ஜப்பான் தங்கப் பதக்கம் வென்றது.

தொடர்ச்சியாக 11 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ள ஜப்பான், கடந்த இரண்டு போட்டிகளுக்குப் பிறகு இதில் மீண்டும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

அதேவேளையில், ஆண்களுக்கான ‘சேபர்’ (sabre) வாள்வீச்சு அணிகள் பிரிவில் தென் கொரியவிடம் தோல்வியடைந்த ஜப்பான், வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

தோல்வி ஏற்பட்ட போதிலும், 2010 குவாங்சூ ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தப் பிரிவில் ஜப்பான் பதக்கம் வென்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments