Colombo – From the Office of Member of Parliament of Sri Lanka – Leader of Tamil Progressive Alliance (TPA)
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை வலியுறுத்தினோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் சநாதோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு சந்தித்தது.
கொழும்பு இந்திய இல்லத்தில் நேற்று நிகழ்ந்த இந்த சந்திப்பில், தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வே, இராதாகிருஷ்ணன், ஜம்முவின சர்வதேச விவகார உப ததலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தரப்பில் தூதுவருடன், அரசியல் துறை இரண்டாம் செயலாளர் அசோக் குமாரும் கலந்து கொண்டார்.?