20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை உபமாலிகா ரவிஹாரி குணதிலக,புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவு ‘ஏ’ பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அவர், ‘கிளீன் & ஜெர்க்’ நிகழ்வில் 7வது இடத்தைப் பிடித்ததுடன், தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கும் பளுதூக்குதல் பிரிவில் தகுதி பெற்று இலங்கை விளையாட்டுத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
முன்னதாக 2023 பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


