Monday, September 21, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு விஜயம்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு விஜயம்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சீனா–அமெரிக்கா உறவுகள் மற்றும் உலக அமைதி, அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி ட்ரம்புடன் ஷி ஜின்பிங் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆறு மாத காலத்திற்குள் இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்வது “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், ஒரு மைல்கல்லாகவும்”  அமையும் என அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சீனா, அமெரிக்காவுடன் இணைந்து பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளை முறையாகக் கையாளவும், இரு நாடுகளின் மக்களின் நலன்களை தொடர்ந்து மேம்படுத்தவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிக்கவும் தயாராக உள்ளது.” என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments