Sunday, September 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கண்டி – கபரகலை வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்

கண்டி – கபரகலை வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்

மலையகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.

இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை, ஹுலுகங்கை, பெத்தேகம, கோமரை மற்றும் பம்பரெல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்தபோது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்க்குழாயின் மீது விழுந்துள்ளதாகவும், இதனால் நீர்க்குழாயில் வெடிப்பு ஏற்பட்டு பெருமளவில் நீர் கசிந்து வீதியில் பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.பன்விலை பகுதியில் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments