Saturday, September 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்

அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர அதிகபட்ச முயற்சி செய்யப்படும்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவூதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பில் சவூதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments