Tuesday, September 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கையை வீழ்த்தி 8ஆவது ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்தியா!

இலங்கையை வீழ்த்தி 8ஆவது ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்தியா!

துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கிண்ணம் 2026 இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, 8ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்றது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவின் வெற்றியில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முக்கிய பங்காற்றினர்.

தொடர் முழுவதும் தோல்வியின்றி பயணித்த இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments