Friday, September 4, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உலகப் பொருளாதாரம் முடங்குகிறதா?  

உலகப் பொருளாதாரம் முடங்குகிறதா?  

 

சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய நரம்பாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியில் கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Kpler நிறுவனம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட கண்காணிப்புத் தரவுகளின்படி, வழமையாக தினமும் சராசரியாக 15 கப்பல்கள் கடக்கும் இந்த வழியில், நேற்று வெறும் 4 வணிகக் கப்பல்கள் மட்டுமே பயணித்துள்ளன.

முந்தைய நாள் 9 கப்பல்கள் பயணித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று பயணத்திலிருந்த கப்பல்களில் இரண்டு மீடியம்-ரேஞ்ச் டேங்கர்கள், ஒரு காம்சார்மேக்ஸ் (Kamsarmax) டேங்கர் மற்றும் ஒரு ஹேண்டிசைஸ் (Handysize) ரகக் கப்பலும் அடங்கும்.

சில கப்பல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தங்கள் இருப்பிடத்தைக் காட்டும் சிக்னல்களை அணைத்துவிட்டுப் பயணிப்பதால், மொத்த கப்பல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments