Tuesday, September 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உயர்தர பரீட்சை வினாத்தாளில் 4 தவறான கேள்விகள் – மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!

உயர்தர பரீட்சை வினாத்தாளில் 4 தவறான கேள்விகள் – மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!

கல்வி பொதுத் தராதர உயர்தர இயற்பியல் பல்தேர்வு வினாத்தாளில் 17, 18, 39 மற்றும் 46 ஆகிய கேள்விகள் தவறாக இடம்பெற்றுள்ளதாகக் கூறி, பிரபல பாடசாலை ஒன்றின் இயற்பியல் ஆசிரியர் ஒருவர் மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று (31) முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த நான்கு கேள்விகளாலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தனது முறைப்பாடில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், 46ஆம் கேள்விக்கு மாத்திரம் அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீதமுள்ள மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ள ஆசிரியர், இந்த விடயத்தை விரைவாக விசாரித்து மாணவர்களுக்கு உரிய நீதி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments