Tuesday, September 1, 2026
spot_img
Homeஉலக செய்திகள்காஷ்மீர் போராட்டத்தில் படைபலப் பிரயோகம்

காஷ்மீர் போராட்டத்தில் படைபலப் பிரயோகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் அளவுக்கு அதிகமான படைபலத்தைப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழு உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் ஜூன் மாதம் முதல் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பில் சுயாதீனமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாதத் தடுப்பு மற்றும் தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், அதிகளவில் படைகள் குவிப்பு, தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள், முக்கிய அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலின் நம்பகத்தன்மை தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments