Tuesday, September 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெப்பமான வானிலை குறித்து வெளியான எச்சரிக்கை

வெப்பமான வானிலை குறித்து வெளியான எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மொணராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘கவனம்’ (Caution) செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டும் என இயற்கை பேரிடர்கள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், அதிக சிரமமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரையில் நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், நிலவும் வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments