Saturday, August 29, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு தென்னாப்பிரிக்க வீராங்கனை கடும் எதிர்ப்பு!

திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு தென்னாப்பிரிக்க வீராங்கனை கடும் எதிர்ப்பு!

திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிசான் கப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகளிர் பிக்பேஷ் லீக் (WBBL) தொடரில் அனயா பங்கர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவுக்கு பதிலளித்துள்ள மரிசான் கப், “இது முற்றிலும் அபத்தமானது, இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், அவுஸ்திரேலியாவில் உள்ள மகளிர் உள்ளூர் மற்றும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் உடனடியாக விளையாட கிரிக்கெட் அவுஸ்திரேலியாவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கொள்கையின்படி, திருநங்கைகள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை.
இருப்பினும், கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது உள்நாட்டுப் போட்டிகளுக்காகத் தனித்துவமான கொள்கையைக் கொண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments