காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இதனால் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடற்படை மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


