Thursday, August 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மன்னார் மாவட்டத்தை வரலாற்றில் பதியப்படுகின்ற ஒரு மாவட்டமாக காணப்போகின்றோம்

மன்னார் மாவட்டத்தை வரலாற்றில் பதியப்படுகின்ற ஒரு மாவட்டமாக காணப்போகின்றோம்

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான ஒரு நாளை நாங்கள் எதிர் காலத்தில் சந்திக்க இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டம் வரலாற்றில் பதிய படுகின்ற ஒரு முக்கியமான மாவட்டமாக நாங்கள் காண இருக்கிறோம் என தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

மன்னார் தேசிய உப்பு நிறுவனம் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் களஞ்சிய சாலையின் திறப்பு விழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பொழுது, நடப்பு அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக நான் வருகின்ற பொழுது, இன்று பல பேரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, இந்த ஒரு தனி மனிதனால் தொடங்கப்பட்ட இந்த மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு விடயம்.

அதே நேரத்திலே, இந்த சந்தர்ப்பத்தில் நான் இந்த இடத்திற்கு வந்து பார்த்த ஒரு விடயம். பழைய மன்னார் உப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியின் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அது 40 வருடங்களாக இருந்த காட்சி. 40 வருடங்களாக அங்கே காணப்பட்டிருந்த காட்சி.
இந்த விடயம் சார்பாகவும், அதே நேரத்தில் இந்த உப்பளத்தின் 4,000 ஏக்கர் நிலப்பரப்பையும் நாங்கள் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும் என்ற தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது.

அந்தத் தேவைப்பாடு கருதி, நாங்கள் 2 கோடியே 58 லட்சம் ரூபாய் பெறுமதி கொண்ட ஒரு வருமானத்தைப் பெற்று, அந்த வருமானத்திலிருந்து திரேசரியிலிருந்து ஒதுக்கீட்டை வழங்கி, அந்த ஒதுக்கீட்டிற்கு அமைவாகவே இன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த நிர்வாகக் கட்டிடத் தொகுதியையும், களஞ்சியக் கட்டிடத் தொகுதியையும் அமைத்திருக்கிறோம்.

இந்த வகையிலே திரேசரி உப்பு நிறுவனத்திற்காக வேண்டி ஒதுக்கி இருக்கிற இந்தப் பணம், உங்களது வியர்வையினால் பெறப்பட்ட பணம். அதாவது, நீங்கள் உற்பத்தி செய்த உப்பினை விற்றுப் பெற்ற லாபத்தினால் திரேசரிக்கு வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆகவே, இது உங்களுடைய சொத்து. ஆகவே, உங்கள் சிரமத்தினால் இந்தப் பணம் சம்பாதிக்கப் பட்டிருக்கின்றது. என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் சந்தோஷத்துடன் தெரிவிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியும், உப்பு இல்லாமல் உணவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் உப்பு அத்தியாவசியமான ஒரு பொருள். ஆனால், எல்லோராலும் இந்த உப்பு உற்பத்தி செய்ய முடியாது.

உப்பு உற்பத்தி செய்வதற்கு ஒரு காலம் தேவை. அதே நேரத்தில், சிறந்த சூரிய ஒளி கிடைக்கப் பெற வேண்டும். அதேநேரம் கடல் நீர் கிடைக்கப் பெற வேண்டும், நல்ல காற்று கிடைக்கப் பெற வேண்டும். ஆகவேதான் இந்தத் தூய்மையான உப்பை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த அனைத்து வளங்களும் மன்னார் மாவட்டத்தில் தான் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றோடு சேர்த்து இந்த மனித வளமும் சேர்ந்தால்தான் அந்த கிரிஸ்டல் (Crystal) உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அம்பாந் தோட்டையிலும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட, அது சற்று நிற மாற்றம் பெற்ற ஒரு உப்புத் தொகுதியாகவே நாங்கள் காண்கிறோம். ஆகவே, மன்னார் மாவட்டத்தில் விளைகின்ற உப்புக்கு மிகப்பெரிய மதிப்பும் கிராக்கியும் சந்தையிலே காணப்படுகிறது .

இயற்கையால் கிடைக்கப் பெறுகின்ற இந்தச் சூரிய ஒளி, கடல் நீர், காற்று என்பவற்றோடு உங்களது சிரமமும் கலந்த சொத்துதான் இந்த உப்பு என்பதை இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன்.இங்கே உற்பத்தியாளர்கள் என்ற வகையில் நீங்கள் பங்கு கொண்டுள்ள ஊழியர்கள் என்ற வகையில் 25 பேர் நிரந்தர ஊழியர்களாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்திலே, 70-க்கும் மேற்பட்டவர்கள் பகுதி நேர ஊழியர்களாக காணப்படுகின்றார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments