Tuesday, August 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கணினி குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஸ்ரீலங்கா சேர்ட் என்ற அமைப்பு புதியதொரு நிதி மோசடி குறித்து பொது மக்களை எச்சரித்துள்ளது.

மத்திய வங்கி, பொலிஸ் நிதிக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவு போன்ற அமைப்புக்களின் அதிகாரிகளைப் போன்று வேடம் தரித்து ஆட்களை ஏமாற்றும் மோசடி பற்றி முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஸ்ரீலங்கா சேர்ட் குறிப்பிட்டுள்ளது.

வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

இந்த மோசடியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வங்கிக் கணக்குகளை சார்ந்த சேமிப்புக்களை இலக்கு வைப்பதாக தெரிகிறது.

கையடக்க தொலைபேசிகள், சமூக ஊடகங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கிகளில் சேமிப்பிலுள்ள தொகை பற்றி விசாரித்து, இந்தத் தொகை சட்டவிரோதமான முறையில் திரட்டப்பட்டதாக முதலில் எச்சரிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரச நிறுவனங்களின் கடித தலைப்புக்களை பயன்படுத்தி சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை எச்சரித்து பணம் பறிக்கும் முயற்சியில் மோசடியாளர்கள் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா சேர்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments