நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நம்பிக்கையில்லா பிரேரணை, 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.


