கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் 43வது கருப்பு ஜூலை நாள் நினைவு கூரப்பட்டுள்ளது.
‘கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன’ என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


