Tuesday, July 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் திருமதி என். ஆர். அனீஸ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார்.

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments