இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
லோட்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்புக்கு 387 ஓட்டங்களை குவித்தது.
பெண் டக்கெட் 141, ஜேக்கப் பெத்தல் 91, ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 74 என ஓட்டங்களை குவித்திருந்தனர்.
388 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 360 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரோஹிட் சர்மா 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
சுப்மன் கில் 77, விராட் கோலி 74 என ஓட்டங்களைப் பெற்றனர்.
முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என சமநிலை இருந்தன.
இறுதிப் போட்டியை வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
20 க்கு 20 தொடரை 4-0 என இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.


