முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் மாலபே பொலிஸ் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள தமது இல்லத்தில் இன்று காலை முன்னாள் பொலிஸ்மா அதிபர் உடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


