லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய (Match-fixing) குற்றச்சாட்டு அடிப்படையில், விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரிவான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


