Monday, July 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரசுக்கு எதிராக எதிரணிகள் ஒன்றிணைய வேண்டும் - தயாசிறி

அரசுக்கு எதிராக எதிரணிகள் ஒன்றிணைய வேண்டும் – தயாசிறி

இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே கருதுகின்றனர் என்றும் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.

மேலும், அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பாளர்களை அரசு இலக்கு வைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments