Saturday, July 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப் பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள்  நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று இந்தப் பிரேரணையில் தங்களது கையொப்பங்களை இட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments