அமெரிக்க அதிபராக கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு அவர்களில் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். அதேவேளை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் இந்திய பிரதமர் மோடியிடம் உரையாடினார். இந்த உரையாடலின்போது அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியிடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் மோடி சரியான நவடிக்கையை மேற்கொள்வார். இது தொடர்பாக இந்தியாவிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வெள்ளை மாளிகையில் மோடியை நான் சந்திக்க உள்ளேன்’ என்றார்.
சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் மோடி நடவடிக்கை மேற்கொள்வார் – டிரம்ப்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on