உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 16 அணிகளுக்கான சுற்றில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் சார்லஸ் டி கெட்டேலேரே (Charles De Ketelaere) 9 ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து பெல்ஜியம் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் மாலிக் டில்மேன் (Malik Tillman) ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
எனினும், ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் சார்லஸ் டி கெட்டேலேரே மீண்டும் ஒரு கோல் அடித்து பெல்ஜியத்தின் முன்னிலையை 2-1 என உறுதி செய்தார்.
57 ஆவது நிமிடத்தில் ஹான்ஸ் வனகென் (Hans Vanaken) பெல்ஜியம் அணியின் மூன்றாவது கோலை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் மாற்று வீரராக களம் புகுந்த நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு (Romelu Lukaku) ஒரு கோலை அடித்து பெல்ஜியத்தின் வெற்றியை 4-1 என உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பெல்ஜியம் அணி காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.


