முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ளார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் விழுப்புரத்திற்கான புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி, ரூ. 304 கோடி செலவில் நந்தன் கால்வாய் திட்டம், ரூ. 1.5 கோடியில் விக்கிரவாண்டியில் கக்கன் நகரில் சமுதாய கூடம், கோலியனூரைச் சுற்றுள்ளப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுகுடிநீர் திட்டம் அமைக்கப்படும். திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், உணவு அருந்தும் இடம், சமையல் கூடம் ஆகியவை அமைக்கப்படும். செஞ்சி, மரக்காணத்தில் புதிய தொழிற்பயிற்சி மையங்கள். ரூ. 84 கோடியில் தளவானூர் அணைக்கட்டு சீரமைப்பு உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
“கூட்டு குடிநீர் திட்டம் ” – விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on