கனடாவில் இருந்து வருகைதந்துள்ள ஈழத்தின் முன்னணி பாடகர் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திங்கட்கிழமை (27) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஆசிரிய மாணவர் இ.செந்தூர்ச் செல்வன் முன்னிலைப்படுத்தினார்.
கலாசாலையில் முதலாவது இசையாசிரியர் அணியில் பயிற்சி பெற்ற தனது அனுபவங்களை பொன் சுந்தரலிங்கம் எடுத்துக் கூறினார். அத்துடன் கலாசாலையை வாழ்த்தி பாடல் ஒன்றையும் இயற்றி பாடினார்.
கலாசாலை சமூகத்தின் சார்பில் பொன் சுந்தரலிங்கத்தை கலாசாலை முகாமைத்துவக் குழுவினர் கௌரவித்தனர்.