புனித ரமழான் மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இன்று (27) திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இந்த பேரீச்சம் பழங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.