பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் காலை எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லோரி சென்றுகொண்டிருந்தது. தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லோரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லோரி வெடித்து 6 பேர் உயிரிழப்பு
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on