Sunday, April 20, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின.

இந்நிலையில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே லீக் சுற்றில் இருந்து 4 புள்ளிகளை கொண்டு வந்திருந்த இந்திய அணி தற்போதைய வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

இதே பிரிவில் நடக்க இருந்த இலங்கை- ஸ்காட்லாந்து இடையிலான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. இந்த ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனதன் மூலம் குரூப்1-ல் இருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் (தலா 6 புள்ளி) அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments