Friday, June 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கு மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு

வடக்கு மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்ததாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் ( நெடுந்தீவிற்கு 02 படகுகளும், காரைநகருக்கு 01 படகுகள்), முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments