Friday, June 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சர்வதேச நீதியை வலியுறுத்தி செம்மணியில் போராட்டம்

சர்வதேச நீதியை வலியுறுத்தி செம்மணியில் போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னதாகப் பிற்பகல் 2 மணிக்கு இந்த மக்கள் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments